வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (30/12/2016)

கடைசி தொடர்பு:13:08 (30/12/2016)

அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவு! 

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் மாற்ற இன்று கடைசி நாள் என்பதால் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மாேடி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இன்று 12 மணிமுதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மேலும், டிசம்பர் 30-ம்தேதி (இன்று) வரை இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, 500, 1000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் மாற்றியும், டெபாசிட் செய்தும் வருகின்றனர். பிரதமர் அறிவிப்பு இன்றுடன் முடிவடைவதால் பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். இதனால் வங்கிகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி இன்று முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் விவரங்களை மின்னஞ்சலில் இன்று இரவுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், டெபாசிட் மூலம் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை நாளை இரவுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க