வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (31/12/2016)

கடைசி தொடர்பு:14:54 (31/12/2016)

24 மணி நேரத்திற்குள் அகிலேஷ் சஸ்பெண்ட் வாபஸ்!

 

உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டதாக முலாயம் சிங் அறிவித்துள்ளார். சமாஜ்வாதி  கட்சியில் இருந்து உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை ஆறு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்து அக்கட்சித் தலைவர் முலாயம் சிங் நேற்று திடீர் அறிவிப்பு வெளியிட்டார். சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில்  அகிலேஷ் ஆதரவாளர்கள் பெயர் இடம் பெறவில்லை என்பதே பிரச்னைக்கு முக்கிய காரணம். இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கிய 24 மணி நேரத்தில், அகிலேஷ் மற்றும் ராம் கோபால் ஆகியோர் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டுவிட்டனர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க