வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (01/01/2017)

கடைசி தொடர்பு:15:47 (01/01/2017)

சமாஜ்வாதி கட்சியில் இருந்து ராம்கோபால் மீண்டும் சஸ்பெண்ட்

சமாஜ்வாதி கட்சியில் இருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ்வை மீண்டும் சஸ்பெண்ட் செய்து முலாயம் சிங் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அகிலேஷ்யாதவ் மற்றும் ராம்கோபால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, பின் மீண்டும் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் ராம்கோபால் 6 ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  சமாஜ்வாதி கட்சியின் செயற்குழு இன்று நடைபெற்றது. அதில் அகிலேஷ்யாதவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முலாயம்சிங், "இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டம் கட்சி விதிமுறைகளுக்கு விரோதமானது. எனவே, ராம் கோபால் யாதவ் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்" என தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க