முதுகலைப்படிப்பில் கிராமப்புற டாக்டர்களுக்கு 50% ஒதுக்கீடு

கிராமப்புறங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, அரசு கல்லூரிகளில் முதுகலை மருத்துவப்படிப்பில் 50% இடங்கள் ஒதுக்கீடு வழங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு, டாக்டர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் கிராமப்புற, அரசு சுகாதார மையங்களில் பணியாற்றி இருக்க வேண்டும். கிராமங்களில் டாக்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வு முடிவில் 25,300 சுகாதார மையங்களில் 8 சதவீத மையங்களில் டாக்டர்கள் இல்லை என்று கூறப்பட்டது. 

மேலும், அந்த சுகாதார மையங்களில் 50 சதவீதம் பெண்களுக்கான பணியிடங்களும், 61 சதவீதம் ஆண்களுக்கான பணியிடங்களும் காலியாக இருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!