உச்ச நீதிமன்றத்தில் காவலர் தற்கொலையால் பரபரப்பு

உச்ச நீதிமன்ற வளாகத்தில் காவலர் ஒருவர் இன்று காலை தற்கொலை செய்துள்ளார். தலைமைக் காவலரான சந்த்பால் உச்ச நீதிமன்றத்தின் 'G' கேட் பகுதியில், தனது துப்பாக்கியாலே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தால் உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் விரைந்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட சந்த்பால், கடந்த 2014-ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற வளாக பணியில் ஈடுபட்டிருந்தார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!