வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (02/01/2017)

கடைசி தொடர்பு:12:21 (02/01/2017)

பிசிசிஐ தலைவர் பதவி நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து அனுராக் தாக்கூரை உச்ச நீதிமன்றம் அதிரடியாக நீக்கியுள்ளது. பொய்யான தகவல்களை தந்த விவகாரத்தில்  உச்ச நீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி பிசிசிஐ செயலாளர் பதவியில் இருந்து அஜய் ஷிர்கே நீக்கப்பட்டுள்ளார். ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்றும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்து அனுராக் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  

லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தும் விவகாரத்தில், பின்னடைவு ஏற்படுத்த ஐசிசி-யிடமிருந்து கடிதம் பெற பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் முயற்சி செய்துள்ளார். கடித விவகாரத்தை மறைத்த குற்றத்துக்காகவும் ஜூலை 18-ம் தேதி வெளியான உத்தரவை அனுராக் மற்றும் அஜய் பின்பற்றவில்லை என்பதாலும் பிசிசிஐ பதவிகளில் இருந்து இருவரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  லோதா பரிந்துரைகளை கிரிக்கெட் வாரியம் மற்றும் பிசிசிஐ பின்பற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க