கர்நாடக அமைச்சர் ஹெச்.எஸ்.மகாதேவா பிரசாத் மாரடைப்பால் காலமானார்

கர்நாடக அமைச்சர் ஹெச்.எஸ்.மகாதேவா பிரசாத்  மாரடைப்பால் காலமானார். 58 வயதான மகாதேவா நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற  சிக்மகளூரில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளார். இன்று காலை அவர் தங்கியிருந்த அறையின் கதவுகள் திறக்கப்படவில்லை என்பதால் அவரது காவலாளி உள்ளே சென்று பார்த்தபோது மகாதேவா இறந்த நிலையில் கிடந்துள்ளார். இரவு தூங்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. மகாதேவா காலமானதை தொடர்ந்து கர்நாடகாவில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் கர்நாடக மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!