எதிர்காலம்! ஊழியர்களை எச்சரிக்கும் இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக 2014 ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றவர் விஷால் சிகா. இன்ஃபோசிஸின் சி.இ.ஓ-வாக தான் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் சிகா, புத்தாண்டு நிகழ்ச்சியின் போது தன் நிறுவன ஊழியர்களிடம், 'பிரக்சிட், அமெரிக்க அதிபர் தேர்தல், பண மதிப்பு நீக்கம், அகதிகள் மற்றும் தீவிரவாதம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் போன்றவை நாம் உலகத்தைப் பார்க்கும் விதத்தையே மாற்றியுள்ளது.

ஆனால், இவை எல்லாவற்றையும் விட கட்டுக்கடங்காமல் வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பது தொழில்நுட்பமும் டிஜிட்டல் மயமும்தான். இனிமேல், நமக்கு கொடுக்கப்படும் வேலைகளை மட்டும் செய்யாமல், எல்லைகளை கடக்க வேண்டியுள்ளது' என்று பேசியுள்ளார்.

ஐ.டி நிறுவனங்களின் வருமான சதவிகிதம் கடந்த சில காலாண்டுகளாக குறைந்து வருகிறது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில்,  நிறுவன ஊழியர்கள் மத்தியில் சிகா இப்படி பேசியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!