தற்போது ஏர்டெல்லிலும் இலவச இன்டர்நெட்!

கடந்த ஆண்டு தொலைத் தொடர்பு சந்தையில் அறிமுகமான ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவையை அறிமுகப்படுத்தியது. இதனால், மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் பல அதிரடி ஆஃபர்களை அறிவித்தது.

இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம், தனது 4G சேவைக்கு மாறும் அல்லது புதிதாக 4G சேவைக்கான சிம்மை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, சில குறிப்பிட்ட பேக்குகளை ரிசார்ஜ் செய்யும் பட்சத்தில் கூடுதலாக 3GB இன்டர்நெட் சேவையைக் கொடுக்கும் என தெரிவித்துள்ளது. ஒரு ரிசார்ஜ் பேக் 28 நாட்கள் வேலிடிட்டி வரும். இந்த 28 நாட்களில்தான் கூடுதல் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும். இந்த சேவையை பெற பிப்ரவரி மாதம் 28-ம் தேதிக்குள் ஏர்டெல்லின் 4G சேவைக்கு மாற வேண்டும். இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை கூடுதல் இன்டர்நெட் சேவை தொடரும் எனவும் ஏர்டெல் கூறியுள்ளது. இந்த ஆண்டு மட்டும், மொத்தம் 13 முறை இந்த சேவையைப் பெற முடியம். ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் என இரண்டு ப்ளான்களுக்கும் இந்த ஆஃபரை அறிமுகம் செய்கிறது ஏர்டெல் நிறுவனம், குறிப்பிட்ட சில பேக்குகளை பயன்படுத்தும் போது மட்டும்தான் இந்த கூடுதல் இன்டர்நட்டை அனுபவிக்க முடியும் எனவும் கூறியுள்ளது.
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!