உ.பி. உள்பட 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு!

உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி இன்று அறிவித்தார்.

டெல்லியில் ஐந்து  மாநில தேர்தல் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய  நஜிம், '’மொத்தம் 690 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. மேலும் 5 மாநிலங்களில்  16 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 1,85,000 வாக்குப் பதிவு மையங்கள், பெண்கள் வாக்களிக்க பெண் அதிகாரிகள் உள்ள தனி வாக்குபதிவு மையம், ராணுவத்தினர் இணைய வழியாக வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக கூடுதல் வசதிகள் செய்து தரப்படும்.

கோவா மற்றும் பஞ்சாபில் ஜனவரி 5-ம் தேதியும், மணிப்பூர் மற்றும் உ.பி.யில்  ஜனவரி 12-ம் தேதியும், உத்தரகண்ட்டில் ஜனவரி 10-ம் தேதியும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 

பஞ்சாப் மற்றும் கோவாவில் பிப்ரவரி 4-ம் தேதியும், உத்தரகண்ட்டில் பிப்ரவரி 15-ம் தேதியும், மணிப்பூரில் முதல் கட்டமாக மார்ச் 4-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக மார்ச் 8-ம் தேதியும் தேர்தல் நடைபெறும்.  உத்தரகண்ட்டில் பிப்ரவரி 15-ம் தேதியும்,
உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 11, 15, 19, 23, 27, மார்ச் 4,8 உள்ளிட்ட தேதிகளில் தேர்தல் நடைபெறும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!