மைசூருவில் பறவைக் காய்ச்சல் பதற்றம்!

மைசூரு பூங்காவில் சில பறவைகள், பறவைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளன. இந்த பறவைகள் பூங்காவுக்குச் சொந்தமானவைகள் இல்லை. இவை, கேரளாவில் இருந்து, மைசூரு பூங்காவுக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து பூங்கா குளத்தில் உயிரிழந்த பறவைகளின், உடலை சோதித்துப் பார்க்கையில், அந்த பறவைகள் H5N8 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மைசூரு உயிரியல் பூங்காவில், நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மைசூரு பூங்கா வருகின்ற பிப்ரவரி 2-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!