வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (05/01/2017)

கடைசி தொடர்பு:16:16 (05/01/2017)

பிரதமர் மோடிக்கு நிதிஷ்குமார் திடீர் புகழாரம்

10-வது சீக்கிய மத குருவான குரு கோபிந்த் சிங்கின்   350-வது பிறந்தநாளை, இந்தியா முழுவதும் சீக்கியர்கள் கொண்டாடி வருகின்றனர். குரு கோபிந்த் சிங்கின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று பீகார் மாநிலம் பாட்னாவில் குரு கோபிந்த் சிங்கின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பிரமதர் மோடி, ’குரு கோபிந்த் சிங்  தியாகம் மறுவடிவம்’ என புகழாரம் சூட்டியுள்ளார். பின்னர் உரையாற்றிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ’பிரதமர் மோடி, குஜராத்தில் 12 வருடங்கள் முதல்வராக இருந்த போது அங்கு மதுவிலக்கு அமல்படுத்தியது பாராட்டுக்குரியது’ என மோடியை புகழ்ந்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க