புஹாரி குழும நிறுவனம் ரூ.420 கோடி வரி ஏய்ப்பு! ஐடி தகவல்

IT raid

புஹாரி குழும நிறுவனம் ரூ.420 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள புஹாரி குழும நிறுவனம் உள்பட 76 இடங்களில் வருமான வரித்துறை நேற்று முன்தினம் அதிரடி சோதனையை தொடங்கியது. 3-வது நாளாக இன்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு நாட்கள் நடந்த சோதனை முடிவில் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் புஹாரி குழும நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, புஹாரி குழும நிறுவனம் ரூ.420 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்ததற்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், நிலக்கரி இறக்குமதி செய்ததிலும் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!