வெளியிடப்பட்ட நேரம்: 20:29 (06/01/2017)

கடைசி தொடர்பு:20:29 (06/01/2017)

பந்திபூர் தேசிய பூங்காவில் கடும் வறட்சி

கர்நாடக மாநிலம் பந்திபூர் தேசிய பூங்காவில் கடும் வறட்சி நிலவுவதால், அங்குள்ள வனவிலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு போதிய நீர், உணவு பற்றாக்குறை மற்றும் அவ்வபோது ஏற்படும் காட்டுத்தீயினால், பந்திபூர் தேசிய பூங்காவில் இருந்து விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

பந்திபூர் தேசிய பூங்காவில் இருந்து பெரும்பாலான விலங்குகள், அருகில் உள்ள தமிழக எல்லையான முதுமலை புலிகள் காப்பகத்திற்கு இடம் பெயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், வனவிலங்குகள் இடம்பெயரும்போது, பந்திப்பூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உணவு கிடைக்காத புள்ளிமான்கள் சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள் தரும் உணவு பொருட்களை உண்டு வருகின்றன. 

- செய்தி மற்றும் படங்கள்: தி.விஜய்

நீங்க எப்படி பீல் பண்றீங்க