ஹெலிகாப்டர் ஊழல்: தரகருக்கு வாரண்ட்!

Christian michel

காங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2010-ல், நாட்டில் மிக முக்கியப் பிரமுகர்களுக்கு ரூ.3,600 கோடியில், இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் ஹெலிகாப்டர் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் இடைத்தரகர்கள் மூலம் ரூ.360 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், முக்கிய இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட்டை டெல்லி பாட்டீயாலா நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இயக்குனர்கள் இருவருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!