வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (08/01/2017)

கடைசி தொடர்பு:13:58 (08/01/2017)

அர்னாப் கோஸ்வாமியின் 'Republic' ட்விட்டரில்...?

Arnab's Republic

டைம்ஸ் நவ் செய்திச் சேனலின் முன்னாள் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி புதிதாக 'Republic' என்ற சேனலை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், ட்விட்டர் தளத்தில் 'Republic' என்ற பெயரிட்டப்பட்ட செய்திச் சேனலின் பக்கம் வைரலாகி வருகிறது.

இந்த ட்விட்டர் பக்கம் பிரபலமாகி வந்தாலும், இதுதான் அர்னாப் ஆரம்பிக்கப்போகும் புது செய்தி சேனலின் அதிகாரப்பூர்வப் பக்கம் என்பதற்கான எந்த உறுதியான தகவலும் இல்லை.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அர்னாப், தான் புதியதாக செய்திச் சேனல் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக கூறினார் என்பது கவனிக்கத்தக்கது. 

'இந்த தேசம் தெரிந்துகொள்ள விரும்புகிறது. நாங்கள் தற்போது சமூக வலைதளத்தில் உயிர் பெற்றுள்ளோம். எங்கள் செய்திச் சேனல் வெளிவரும் வரை, புரட்சியை இங்கு பின்பற்றுங்கள்.' என ரிபப்ளிக் முதல் டீவிட்டை பதிவிட்டுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க