வெளியிடப்பட்ட நேரம்: 16:18 (08/01/2017)

கடைசி தொடர்பு:16:18 (08/01/2017)

ஆளில்லா ரயில்வே கேட் விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

Maitree express accident

வங்காள தேசத் தலைநகர் டாக்காவை, இந்தியாவின் கொல்கத்தாவுடன் இணைக்கும் மைத்ரி எக்ஸ்பிரஸ் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர்.

இன்று காலை டாக்கா நகரில் இருந்து கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்த போது, காசிப்பூர் என்னும் பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது மோதியதில் கார் தூக்கி வீசபட்டது.

காரில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க