இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள கறுப்புப் பணம் ரூ.4807 கோடி | Total amount of black money seized in India

வெளியிடப்பட்ட நேரம்: 07:56 (09/01/2017)

கடைசி தொடர்பு:10:21 (09/01/2017)

இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள கறுப்புப் பணம் ரூ.4807 கோடி

கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி அன்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினரால் சோதனை நடத்தப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் மொத்தமாக ரூபாய் 4,807 கோடி கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.மேலும் புதிய ரூபாய் நோட்டாக 112 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள கறுப்புப் பணம்..!


இதுவரை மொத்தம் 1,138 வருமான வரித்துறை சோதனைகள் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இந்திய நேரடி வரிவிதிப்புத் துறையின் தலைவர் சுஷில் ஷந்திரா இது குறித்து கூறுகையில் ``நவம்பர் மாதத்திலிருந்து இதுவரை மொத்தமாக 3000 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன, மேலும் 76 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது`` என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close