வெளியிடப்பட்ட நேரம்: 00:13 (10/01/2017)

கடைசி தொடர்பு:10:34 (10/01/2017)

ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கு புதிய தலைவர்...!

ஆன்லைன் வர்த்தகத்தில் முக்கியமான இடத்திலிருக்கும் ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கு புதிய செயல் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை தொடங்கிய நபர்களில் ஒருவரான சச்சின் பன்சால் இந்த நிறுவனத்துக்குத் தலைவராகவும், கல்யாண் கிரிஷ்ண மூர்த்தி இதன் செயல் தலைவராகவும் செயல்படுவார் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கு புதிய தலைவர்...!


தற்போது  செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கல்யாண் கிரிஷ்ண மூர்த்தி இதற்கு முன், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் வடிவமைப்பு துறையின் தலைவராக பணியாற்றியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் ``இனிவரும் காலங்களில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கும் என்றும், பல்வேறு உயரங்களை அடையும் வகையில் செயல்படுவேன்`` என்றும் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க