Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தமிழர்களை ஏமாற்றுகிறதா? #PeopleSurvey

ஜல்லிக்கட்டு போராட்டம்

ல்லிக்கட்டுக்கு பொதுமக்களிடையே ஆதரவு பெருகிக்கொண்டே வருகிறது. நேற்று முதல் (17.01.17) மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று இளைஞர்களும் பெண்களும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்திவருகிறார்கள். ஒருபுறம், உணவு மற்றும் தூக்கமின்றியும்... மறுபுறம், மின்விளக்குகள் இன்றியும் மொபைல் போன் வெளிச்சத்துடன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில், அவர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பதிலைத்தான். அவர் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு இதுவரை அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இப்படி இருக்கும் சூழலில், ஜல்லிக்கட்டு நடத்த தடை நீடிப்பது, மத்திய மாநில அரசுகள் தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக செய்யும் சூழ்ச்சி என கருத்துகள் பரவி வருகின்றன. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? 

கீழே உள்ள சர்வேயில் கலந்துகொண்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தமிழர்களை ஏமாற்றுகிறதா ? #PeopleSurvey

 

1). பொங்கலுக்குப் பிறகு, ஜல்லிக்கட்டுக்குப் பெருகும் ஆதரவு? *

2). ‘போராடும் இளைஞர்களை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருக்க வேண்டும்’ என்ற கருத்தை...

3). ‘நீதிமன்றத்தைக் காரணம்காட்டி மத்திய அரசும், மாநில அரசும் தமிழர்களை ஏமாற்றுகிறது’ என்ற வாதத்தை...

4). ‘இது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் மட்டுமல்ல, தொடர்ந்து அரசுகள் மக்களை வஞ்சிக்கின்றன... ஏமாற்றுகின்றன. அதற்கு எல்லாம் எதிரான போராட்டம்’ என்ற வாதத்தை...

5). ‘‘தமிழர்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால்... நீதிமன்றம் மூலமாக ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கி இருப்பேன்’’ என்று சுப்பிரமணியன் சுவாமி மற்றும் சிலர் சொல்லும் கருத்துகளை

6). இத்தனை போராட்டங்களுக்குப் பிறகும் ஜல்லிக்கட்டு நடத்தத் தடை நீடிப்பது?

7). பீட்டா, மற்ற விலங்குகள் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளையும் இப்படித்தான் அணுகுகிறதா?

8). ஜல்லிக்கட்டு தொடர்பான உங்கள் கருத்தை இரண்டு வரிகளில் இங்கே பதிவிடவும்...

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

ஜல்லிக்கட்டு தொடர்பான உங்கள் கருத்துகளைக் கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.

- நந்தினி சுப்பிரமணி

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement