வெளியிடப்பட்ட நேரம்: 13:23 (20/01/2017)

கடைசி தொடர்பு:16:34 (20/01/2017)

#Jallikattu தமிழக மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும்! மத்திய அமைச்சர்

Anil Dave

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அனில் மாதவ்தவே தெரிவித்தார்.

டெல்லியில் இன்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோருடன் மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் அனில் மாதவ்தவே செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பேசிய அனில், ’பல நூற்றாண்டு பழமை வாய்ந்தது ஜல்லிக்கட்டு என்பதை ஏற்கிறோம். தமிழ் பாரம்பர்யத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுக்கப்படும். ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் திட்டவட்ட முடிவெடுக்கப்படும். தமிழக மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும்’ என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க