மோடி கல்வித்தகுதி வழக்கு - ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

பிரதமர் மோடியின் கல்வித் தகுதி தொடர்பான தகவல்களை அளிக்கும்படி டெல்லி பல்கலைக்கு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு, டில்லி ஐகோர்ட் தடை விதித்தது.

மோடி

பிரதமர் நரேந்திர மோடி, 1978-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ., முடித்ததாகத் தேர்தல் விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தார். இதுகுறித்த ஆதாரங்களைத் தரும்படி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், நீரஜ் என்ற சமூக ஆர்வலர் கேட்டிருந்தார். அதற்கு, டெல்லி பல்கலையின் தகவல் அதிகாரி மறுப்புத் தெரிவித்தார். மூன்றாம் நபர் குறித்த விபரங்களைக் கோருவதாலும், அதில் பொதுநலன் ஏதும் இல்லை என்றும், தகவல் அதிகாரி தன் பதிலில் கூறியிருந்தார். 

இதை எதிர்த்து, மத்திய தகவல் ஆணையத்தில், நீரஜ் முறையிட்டார். அதை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், 1978-ல், பி.ஏ., படித்த அனைவரின் தகவல்களையும் தர வேண்டும் என, டெல்லி பல்கலைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து பல்கலை நிர்வாகம் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

டெல்லி ஐகோர்ட்டில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்ததும், மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்குத் தடை விதித்துள்ளது. இது குறித்துப் பதிலளிக்கும்படி, நீரஜுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட ஐகோர்ட், வழக்கின் விசாரணையை ஏப்., 27க்கு ஒத்திவைத்தது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!