வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (25/01/2017)

கடைசி தொடர்பு:11:01 (25/01/2017)

18 வயது நிரம்பியவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

Narendra Modi

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 18 வயது நிரம்பியவர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, 'தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 18 வயது நிரம்பியவர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின், அவர்கள் ஓட்டுரிமையை பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்திய ஜனநாயகத்துக்கு தேர்தல் ஆணையம் ஆற்றும் பங்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர், 'இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் எனது வாழ்த்துகள். நம் ஜனநாயகத்தில் அவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க