வெளியிடப்பட்ட நேரம்: 03:54 (26/01/2017)

கடைசி தொடர்பு:03:35 (26/01/2017)

'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' வீரர்களுக்கு ராணுவ விருது!

இந்திய எல்லையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' எனும் தீவிரவாத முகாம் அழிப்பு நடவடிக்கைகளை நடத்தியது. இந்தத் தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்திய இந்தியாவைச் சேர்ந்த 22 ராணுவ வீரர்களுக்கு ராணுவ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மேலும், இந்திய ராணுவத்தின் 4 பாரா படைப்பிரிவின் மேஜர் ஒருவருக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 5 வீரர்களுக்கு சவுரிய சக்ரா விருது, 4 மற்றும் 9 -வது பாரா சிறப்பு படையின் காமண்டர்களுக்கு யுத் சேவா விருது, 14 வீரர்களுக்கு சேனா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள் அனைத்தும் குடியரசு தினவிழாவில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்வில் வைத்து வழங்கப்படும். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க