வெளியிடப்பட்ட நேரம்: 10:28 (26/01/2017)

கடைசி தொடர்பு:11:49 (26/01/2017)

டெல்லியில் 68-வது குடியரசு தின கொண்டாட்டம்

Modi

இந்திய நாட்டின் 68-வது குடியரசு தின சிறப்பு கொண்டாட்டம் டெல்லியின் ராஜ்பாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வந்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்துள்ளார். 

டெல்லியில் காலையில் பெய்த மழை காரணமாக குடியரசு தின நிகழ்ச்சிகள் சற்று தாமதமாக ஆரம்பித்தது. முதலில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, முப்படை தளபதிகளுடன் அமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்தினார். அதன்பின், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி குடியரசு தின நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்தார். 

Pranab Mukherjee

பின்னர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வந்தார். அவர் ராஜ்பாத்தில் உள்ள  தேசியக் கொடியை ஏற்றினார். அதனையடுத்து, நாட்டிற்காக வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார். தற்போது, இந்திய ராணுவ பலத்தை பறைசாற்றும் அணிவகுப்பு நடந்து வருகிறது.  

இன்றைய குடியரசு தின விழா நிகழ்ச்சியில் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயாத் அல் நஹ்யான் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க