வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (27/01/2017)

கடைசி தொடர்பு:17:41 (27/01/2017)

ஃப்ளோரிடாவை பாதுகாக்கும் பணியில் இந்தியர்!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், இந்தியாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஹீரோவாகி வருகிறார். அங்கு பூர்மிஸ் வகை மலைப்பாம்பின் தொல்லை அதிகரித்தது. இதையடுத்து, அங்குள்ள மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம், இந்தியாவின் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் ஒருவரை களமிறக்கியது.  அவர் தனது உதவியாளர், வேட்டை நாய், ஆகியவற்றின் உதவியுடன் 8 நாட்களில்13 பாம்புகளைப் பிடித்துள்ளார். அதில் ஒரு பாம்பு 16 அடி  நீளம் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க