வெளியிடப்பட்ட நேரம்: 10:13 (28/01/2017)

கடைசி தொடர்பு:10:42 (28/01/2017)

இந்தியாவில் முதன்முறையாக கடலுக்கு அடியில் நடந்த திருமணம்

underwater marriage

கடலுக்கு மேலே பறந்துகொண்டே, நீந்திக்கொண்டே என்று வித விதமாக திருமணம் செய்து கொண்டிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு மத்தியில், இந்தியாவில் ஒரு வித்தியாசமான திருமண கணக்கை துவக்கி வைத்திருக்கிறது இந்த ஜோடி. மஹாராஷ்ராவை சேர்ந்த நிகில் பவார், ஸ்லோவாக்கியா-வை சேர்ந்த யுனிகா இருவரும் கடலுக்கு அடியில் திருமணம் செய்திருக்கிறார்கள். கடலுக்கு அடியில் திருமணம் நடப்பது இந்தியாவில் இதுவே முதல் முறை.

கேரளா-வின் கோவளம் கடற்கரையில் நடந்தது இந்த திருமண நிகழ்ச்சி. திருமணத்திற்கான பிரத்யேக ஆடைகளுடன் வந்த ஜோடி, கடலுக்கு அடியில் ஒரு சிறிய மேடையில் ஆக்சிஜன் கருவிகளுடன் வந்து நின்றனர். கடல் சிற்பிகளால் ஆன மாலையை அணிந்து மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றி கொண்டனர். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற சடங்கில் மணமக்களின் நெருங்கிய நண்பர்கள் பங்கேற்றனர். திருமணத்தின் உறுதிமொழிகள் அச்சிடப்பட்ட பேப்பர்கள் இருவரிடமும் காட்டப்பட்டது, மணமக்கள் சைகை மொழியில் சம்மதத்தை தெரிவித்ததுடன் திருமணம் இனிதே நிறைவேறியது. மணமகன் பவார் கோவளம் கடலில் டைவராக பணிபுரிவதாகவும், இந்த முறையில் திருமணம் செய்வது தங்களின் நீண்ட நாள் கனவு அது இன்று நிறைவேறியது என்று கூறினர்.

- எஸ்.எம். கோமதி

நன்றி: The News Minute

நீங்க எப்படி பீல் பண்றீங்க