வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (28/01/2017)

கடைசி தொடர்பு:19:50 (28/01/2017)

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ். எம். கிருஷ்ணா காங்கிரஸில் இருந்து விலகல்!

SM Krishna

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம். கிருஷ்ணா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதுதொடர்பான விலகல் கடிதத்தை அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார். கர்நாடக காங்கிரஸ் கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே எஸ்.எம் கிருஷ்ணா புறக்கணிக்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டது. இதனால், அவர் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எஸ்.எம். கிருஷ்ணா முழுநேர அரசியலில் இருந்தே ஓய்வு பெற்று விட்டார் என்றும் கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க