வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (31/01/2017)

கடைசி தொடர்பு:17:44 (31/01/2017)

வைரலான நடிகை விபத்து வதந்தி!

Sanusha acciedent

மலையாள நடிகை சனுஷா சந்தோஷ், கார் விபத்தில் இறந்ததாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. இது உண்மை என்று நம்பி, பலர் இதை ஷேர் செய்யவே, வைரலாகியுள்ளது இந்த வதந்தி.

விபத்துக்குள்ளான ஒரு காரின் புகைப்படத்துடன் சனுஷா சந்தோஷின் புகைப்படத்தை இணைத்து, விபத்தில் அவர் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. இந்த வதந்தியை உண்மை என்று நினைத்து பலர் ஷேர் செய்யவே, இந்த விஷயம் வைரலானது.

இதையடுத்து சனுஷா, வதந்திகளுக்கு முடிவுகட்டும் வகையில், ஃபேஸ்புக்கில் நாளை லைவ் வீடியோவில் தோன்றுவார் என்று கூறப்படுகிறது. பிரபலங்கள் இறந்துவிட்டதாக இதுபோன்ற வதந்திகள்  சமூக ஊடகங்களில் ஏற்கெனவே பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க