முன்னாள் அமைச்சர் அகமது மறைவுக்கு, மோடி இரங்கல்

EAhamed

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி. ஈ.அகமது, இன்று அதிகாலை உயிரிழந்தார். அவர் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் மறைவால் இன்று  நாடாளுமன்ற அவை சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோடி, அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள அகமது அவர்களின் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!