தமிழக அரசை மத்திய அரசு இயக்குகிறதா? #SurveyResults

தமிழக அரசு, மத்திய அரசு

ல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை மெரினா கடற்கரை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் மாணவர்களும், இளைஞர்களும் தனியாகவும், குடும்பத்தோடும் கலந்துகொண்டனர். சென்னையில் இந்தப் போராட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தி, பின்னர் அது வன்முறையில் முடிந்தது. சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு போலீஸார் தீ வைத்த நிகழ்வுகளும் அரங்கேறின. போலீஸாரின் இந்தச் செயலுக்கு, தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழக அரசையும், காவல் துறையையும் இவ்விஷயத்தில் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக, மத்திய அரசின் தூண்டுதலின் பேரிலேயே தமிழக அரசு திட்டமிட்டு இந்த வன்முறையை நிகழ்த்தியதாகக் கூறப்பட்டது. அதனால், “தமிழக அரசை மத்திய அரசு இயக்குகிறதா?” என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் சர்வே ஒன்று நடத்தப்பட்டது. சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும் கீழே...

மாநில அரசு எந்த மாதிரியான முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதை ஓரிரு வரிகளில் தெரிவிக்கவும்:

*மத்திய அரசின் இடையூறு இருப்பின், மக்களிடம் வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டு ஆட்சியைக் கலைப்பதாகக் கூற வேண்டும்.

*யாரையும் நம்பி முதல்வர் இல்லை என்று புரிந்து நடந்தால் நன்றாக இருக்கும்.

*Purely based on political reasons these parties of opposition make these comments  they really don't bother about public or their emotions  they want to make an uncertain situation so that they can gain benefits

*Makkaluku nanmai sirakkum niyamana Arasu    Thanithuvamana arasu vendum  Ilaya samuthayathin unarvinai mathika vendum

*முதலில், போராட்டத்தைக் கொடூரமாக ஒடுக்கியதற்கு மாணவர்களிடமும் மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! காவிகளின் தலையீட்டைப்  புறக்கணித்துவிட்டு,  தனித்து செயல்பட வேண்டும்! இல்லையேல் ஆட்சிபீடத்தை விட்டு இறங்க வேண்டும்!

*மாநில அரசு மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும்.  மக்களின் மன ஓட்டத்தைப் புரிந்து, பிற தனிப்பட்ட நபர்களின் அதிகாரத்தின் ஆணைக்கு இணங்காமல் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.  முதலமைச்சர், தான் சார்ந்திருக்கும் கட்சியைத் தன் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.  இதற்கு எதிர்ப்பு இருந்தாலும் மக்கள் அவருக்கு துணை நிற்பர்.

*தெளிவான, உறுதியான  மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவுகள் எடுக்க வேண்டும்.

*punish the police who were involved in violence and misbehaved with innocent people

*சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தன்னிச்சையாகச் செய்லபடணும்.  காவலர்கள் வேலையை விட்டு நீக்கணும்.  அவர்களின் முகத்திரையைப் பொதுமக்கள் பார்வக்குத் தெரியப்படுத்தணும்.  சரித்திரத்தில் முதல்முறையா, தமிழன் எல்லா வேற்றுமைகளையும் களைந்திட்டு கூடி இருக்கான். அதை நாசம்செய்த அனைத்து புல்லுருவிகளும் தண்டிக்கப்படணும்.

*மாநில அரசே கலவரத்தைச் செய்யும்போது, அதற்கு எப்படி கோரிக்கை கமென்ட் போடுறது.

*தமிழர்களின் பண்பாட்டைச் சீர்குலைக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

*மக்களின் எண்ணங்களை அறிந்து,  அவர்களின் தேவைகளை நிறைவேற்ற அரசு முனைப்புடன் செயல்படவேண்டும்.  தமிழக மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் மத்திய அரசின் திட்டங்களை முற்றிலும் எதிர்த்து,  அந்தத் திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது.   நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடகராக முயற்சிக்காமல்,  மக்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி, அதற்குத் தீர்வு காண வேண்டும்.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரியாகச் செயல்படாவிட்டால், மீண்டும் இளைஞர்களின் புரட்சி வெடிக்கும்.

 - நந்தினி சுப்பிரமணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!