அஸ்ஸாம் இயக்குநரைக் குற்றவாளியாக்கிய ஷாருக்கானின் 'ரைஸ்' ! | SRK's 'Raees' film made Assam film director guilty

வெளியிடப்பட்ட நேரம்: 01:39 (03/02/2017)

கடைசி தொடர்பு:15:20 (03/02/2017)

ஷாருக்கானின் 'ரைஸ்' படத்தால் மாட்டிக்கொண்ட அஸ்ஸாம் இயக்குநர்

ஸ்ஸாம் திரைப்பட இயக்குநர் ஹிமங்ஷு பிரசாத் தாஸ் 'ஷகிரா அஹிபோ பொகுல்டோலார் பிஹுலாய்' என்ற படத்தை இயக்கியுள்ளார். ஷாருக்கானின் ரைஸ், அஸ்ஸாமில் ஜனவரி 25-ம் தேதி வெளியானது. மெகா பட்ஜெட் படத்தின் போட்டியால், ஜனவரி 20-ம் தேதி வெளியான தாஸின் படத்தை, திரையிடாமல் திரைஅரங்கு உரிமையாளர்கள் நிறுத்திவைத்தனர்.தனது படத்தை வெளியிட இவர் இந்தியாவில் இருந்து அஸ்ஸாமை பிரிக்க முயலும் உல்ஃபா அமைப்பின் தலைவர் பரேஷ் பருவாவிடம் ஃபேஸ்புக் மூலமாக  உதவி கேட்டதாகக் கூறப்படுகிறது. தாஸின் நிலையை உணர்ந்து, திரைஅரங்கு உரிமையாளர்களின் இச்செயலை உல்ஃபா -1 தலைவர் மாநில ஊடகங்கள் வாயிலாக கண்டித்தார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் தாஸ் மீது, பிரிவினை அமைப்பின் ஆதரவை நாடி, நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க