வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (03/02/2017)

கடைசி தொடர்பு:17:16 (03/02/2017)

இரண்டு நாளில் எண்ணெய் கசிவு அகற்றப்படும்!

Oil Spill

கடலில் எண்ணெய் கசிந்த விவகாரம் தொடர்பாக, மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்காரி, செயலாளர் ராஜீவ் குமார் மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராஜீவ்குமார் கூறுகையில், 'இந்த விபத்தில் 10,000 டன் எண்ணெயில், 20 டன் எண்ணெய் கடலில் கலந்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், எண்ணெய் படலத்தை அகற்றும் பணி நடந்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் கடலில் படிந்துள்ள எண்ணெய் முழுமையாக அகற்றப்படும். இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும். கப்பல் நிறுவனங்களிடம் இருந்து முதல்கட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளன. இதுதொடர்பான முழுமையான விவரங்கள் கிடைக்க ஒரு மாதம் ஆகும்' என்றார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க