ரஃபேல் ஒப்பந்தம் : ரகசியம் காக்கும் இந்திய விமானப்படை

Rafale fighter aircraft deal

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை வெளியிட இந்திய விமானப் படை மறுத்துள்ளது. 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவும், பிரான்ஸும் கடந்த செப்டம்பர் மாதம் இறுதி செய்தது. ஒப்பந்தத்தின்படி 36 ரஃபேல் ரக போர் விமானங்கள், ஆயுதங்கள், உதிரிபாகங்கள் உள்ளிட்டவை இந்தியா வாங்க உள்ளது. இதற்கான செலவு சுமார் ரூ.37,000 கோடி. இந்நிலையில் இதை குறித்த தகவல்களை வெளியிடுமாறு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் எழுப்பட்ட கேள்விக்கு, நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட முடியாது என இந்திய விமானப்படை இன்று பதிலளித்துள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!