வெளியிடப்பட்ட நேரம்: 04:25 (06/02/2017)

கடைசி தொடர்பு:04:26 (06/02/2017)

எல்லை தாண்டிய பாகிஸ்தானியர் கைது!

காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 26 வயது இளைஞரை இந்திய பாதுகாப்புபடை வீரர்கள் கைது செய்தனர்.

பாதுகாப்பு படை ரோந்து 


பாதுகாப்பு படைவீரர்கள் தங்களது வழக்கமான ரோந்து பணியின் போது, எல்லை  பகுதியில்  மர்ம நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடி கொண்டிருப்பதை கண்டனர். உடனடியாக அவரை கைது செய்து விசாரித்தனர்.


விசாரணையில் அவர் பெயர் மன்சூர் என்பதும், அவர் பாகிஸ்தான் நாட்டில் உள்ள கிங்கராமோர் பகுதியை சேர்ந்த இக்பால் என்பவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஊடுருவிய காரணம் குறித்தும், ஏதேனும் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவரா என்ற கோணத்திலும் அவரிடம் பாதுகாப்பு படைவீரர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க