Published:Updated:

குஜராத்: புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடம்... லிஃப்ட் அறுந்து விழுந்து 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

லிஃப்ட் அறுந்து விழுந்து 8 பேர் உயிரிழப்பு ( ட்விட்டர் )

அகமதாபாத்தில் கட்டுமான பணி நடைபெற்று வந்த புதிய கட்டடத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்ததில் அதில் பயணித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஏழாவது மாடியில் காலை 10 மணியளவில் லிஃப்ட் வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. அப்போது, ​​லிஃப்டில் எட்டு தொழிலாளர்கள் இருந்தனர். இந்தநிலையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்ததில் அதில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குஜராத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் இந்த கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

லிஃப்ப்ட் அறுந்து விழுந்து 8 பேர் உயிரிழப்பு
லிஃப்ப்ட் அறுந்து விழுந்து 8 பேர் உயிரிழப்பு
ட்விட்டர்

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு மற்றும் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.