Published:Updated:

``திருமணத்தின்போது அவர் ஆண் அல்ல..!" - 8 ஆண்டுகளுக்குப் பிறகு கணவர்மீது புகாரளித்த மனைவி

திருமணம் ( சித்திரிப்புப் படம் )

திருமணத்தின்போது தன் கணவர் ஆணாக இல்லையென்றும், தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும் பெண் ஒருவர் போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

``திருமணத்தின்போது அவர் ஆண் அல்ல..!" - 8 ஆண்டுகளுக்குப் பிறகு கணவர்மீது புகாரளித்த மனைவி

திருமணத்தின்போது தன் கணவர் ஆணாக இல்லையென்றும், தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும் பெண் ஒருவர் போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

Published:Updated:
திருமணம் ( சித்திரிப்புப் படம் )

குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் அண்மையில் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், ``2011-ம் ஆண்டு என் கணவர் விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். அப்போது எனக்கு ஒரு மகள் இருந்தார். அதைத் தொடர்ந்து, திருமண வரன் தேடும் தளத்தில், என்னுடைய இரண்டாவது திருமணம் குறித்துப் பதிவிட்டிருந்தேன். அப்போது மருத்துவர் விராஜ் வர்தன் என்னைத் தொடர்புகொண்டு திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் தெரிவித்தார்.

இரு வீட்டார் முன்னிலையில் 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின்பு தேனிலவுக்காக காஷ்மீருக்குச் சென்றிருந்தபோது அவர் உடலுறவில் ஈடுபடவில்லை. பல காரணங்களைக் கூறி அதை அவர் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தார். ஒருமுறை கட்டாயப்படுத்தியபோது, தனக்கு ரஷ்யாவில் இருந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும், அதனால் மருத்துவச் சிகிச்சையில் இருப்பதால் இப்போது உறவுகொள்ள முடியாது எனச் சில மாதங்கள் காத்திருக்கக் கூறினார்.

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை

அதன் பிறகு, ஜனவரி 2020-ல், உடல்பருமனைக் குறைக்க பேரியாட்ரிக்ஸ் அறுவை சிகிச்சை செய்ய விரும்புவதாக என்னிடம் கூறிவிட்டு கொல்கத்தாவுக்குச் சென்றார். ஆனால் அவர் உண்மையில் பெண் என்பதும், ஆணாக மாறுவதற்காக ஆணுறுப்பை பொருத்திக்கொள்ளும் அறுவை சிகிச்சைக்காகச் சென்றிருந்தார் என்பதும் எனக்குத் தெரியவந்தது. இதைப் பற்றி என்னிடம் அவர் எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை.

சில காலத்துக்குப் பிறகு அவர் என்னுடன் கட்டாய உடலுறவில் ஈடுபடத் தொடங்கினார். அப்போதுதான் எனக்கு அந்த விஷயம் தெரியவந்தது. அதைப் பற்றி யாரிடமாவது பேசினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் என்னை மிரட்டினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காவல்துறை கைது
காவல்துறை கைது

என் மகளின் பெயரில் 90 லட்சம் ரூபாய் லோன் எடுத்து ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடும் வாங்கியிருக்கிறார். என்னை ஏமாற்றிய அவர்மீதும், அதற்கு உடந்தையாக இருந்த அவர் குடும்பத்தார்மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த கோத்ரி காவல்துறை ஆய்வாளர் எம்.கே.குர்ஜார், விசாரணை மேற்கொண்டு அந்த நபரைக் கைதுசெய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.