வெளியிடப்பட்ட நேரம்: 03:13 (09/02/2017)

கடைசி தொடர்பு:11:58 (09/02/2017)

2000 ரூபாய் கள்ள நோட்டு: இளைஞர் கைது!

புதிய இரண்டாயிரம் ரூபாய்

மேற்கு வங்காள மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள இந்தியா-வங்கதேச எல்லையில் அம்மாநில போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 40  இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை வைத்திருந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அந்த இளைஞரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கூடுதலான கள்ள நோட்டுகளைத் தயாரித்து புழக்கத்தில் விட இருந்தது தெரியவந்துள்ளது. மத்திய அரசின் உயர்மதிப்பு கொண்ட பணநீக்க நடவடிக்கைக்குப் பிறகு, புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் போலியாகத் தயாரித்து புழக்கத்தில் விடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை