வெளியிடப்பட்ட நேரம்: 09:43 (10/02/2017)

கடைசி தொடர்பு:10:18 (10/02/2017)

விண்வெளி செல்லும் இந்திய வம்சாவளி பெண்

Shawna Pandya

சாதாரண பொதுமக்களையும் 2018ம் ஆண்டு விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் புதிய திட்டத்தை (Citizen Science Astronaut ), நாசா அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் கீழ், 2018ம் ஆண்டு விண்வெளி செல்லும் குடிமக்கள் பெயர்களை நாசா அண்மையில் வெளியிட்டது. விண்வெளி செல்லும் குழுவில் இந்திய வம்சாவளி பெண், ஷாவ்னா பாண்டியாவும் இடம் பெற்றுள்ளார்.

ஷாவ்னா கனடாவில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார்.  இந்திய வம்சாவளி பெண்களில் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரைத் தொடர்ந்து, மூன்றாவதாக விண்வெளி செல்வது ஷாவ்னா என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க