சுப்பிரமணியன் சுவாமிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Subramanian Swamy

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய சுப்பிரமணியன் சுவாமிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் சட்டவிரோத முதலீடுகள் செய்ய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அனுமதியளித்தது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி  உச்ச நீதிமன்றத்தில் முன்னர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்நிய முதலீடுகளின் வரம்பு தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சுவாமிக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்துக்கு அந்நிய முதலீடு வரம்பு 600 கோடி ரூபாய் என்பது தெரியாதா என்றும் சுப்பிரமணியன் சுவாமியிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!