ஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை | Jammu - Kashmir gun fight

வெளியிடப்பட்ட நேரம்: 01:17 (15/02/2017)

கடைசி தொடர்பு:15:31 (15/02/2017)

ஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஹண்ட்வாரா மாவட்டத்தில்  தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே, ஜம்மு-காஷ்மீர் மாநில காவல் துறையின் தீவிரவாத ஒழிப்பு சிறப்புப் படையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த இடத்தை இன்று சுற்றிவளைத்தனர். அந்தப் பகுதிகளை இணைக்கும் நாற்புற சாலை வழிகள் அனைத்தும்  மூடப்பட்டன. பாதுகாப்புப் படையினரை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த சில தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினார்கள். இருதரப்பினருக்கும் இடையில் அங்கே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும், இந்த மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், ஒரு வீரர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க