இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் நுழைய, சுரங்கப்பாதை முயற்சி முறியடிப்பு! | Terrorists tried to enter the India from tunnel and it prevented!

வெளியிடப்பட்ட நேரம்: 03:16 (15/02/2017)

கடைசி தொடர்பு:15:28 (15/02/2017)

இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் நுழைய, சுரங்கப்பாதை முயற்சி முறியடிப்பு!

இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லை


காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில் 'பத்வால் ராணுவ முகாம்' அருகில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் நுழைய, தீவிரவாதிகள் முயன்றுள்ளனர். குறிப்பாக, வயல்வெளிகளுக்குள் 65 அடி நீண்ட  சுரங்கப்பாதை அமைத்துள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன் தினம் ரோந்துபணியில் ஈடுபட்டு இருந்த இந்திய ராணுவ வீரர்கள், இதைக்கண்டறிந்து, எதிராளிகளின் சதியை முறியடித்துள்ளனர். சுமார் 2.5 அடி சதுரமான உட்கூடு கொண்ட, வயல்வெளியில் அமைக்கப்பட்ட, இந்த சுரங்கப்பாதையை அடைக்க இந்தியப் படையினர் சென்றபோது , தீவிரவாதிகள் 3 தடவை சுட முயற்சித்துள்ளனர். உடனே தக்க பதிலடி கொடுத்து, நம் ராணுவம் எதிரிகளை விரட்டியுள்ளது.

இது குறித்து பேசிய துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் தர்மேந்திர பரேக் கூறுகையில்,' சரியான நேரத்தில் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதால், சதிகாரர்களின் நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது. ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க