காதலிச்சா இப்படி காதலிக்கணும்! செம்ம கெத்து விராட் | Virat Kohli - Anushka Sharma posted valentine day selfie

வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (15/02/2017)

கடைசி தொடர்பு:17:25 (15/02/2017)

காதலிச்சா இப்படி காதலிக்கணும்! செம்ம கெத்து விராட்

லவ் பண்ற பொண்ணைத்  திட்டினா கோபம் வரணும். அதே பொண்ணுகூட கிசுகிசு வந்தா அதை சமாளிக்கணும். அதேமாதிரி அந்தப் பொண்ணும் லவ் பண்ற பையனைப் பத்தி வதந்தி வந்தா, அதை கெத்தா சமாளிக்கணும். ஊரே இவங்க எங்கயாவது ஒளிஞ்சு மறைஞ்சு லவ் பண்ணிட்டு இருப்பாங்கனு சொல்லும்போது, செம மாஸா பப்ளிக்கா செல்ஃபி போட்டு வாழ்த்துச் சொல்லணும். ‛இப்படிப் பண்றதெல்லாம் சரி. லவ் பண்ணிக்கிட்டே இருந்தா வேலையை யாரு பாக்கிறது'னு கேட்கிறவங்களுக்குப் பதிலடி தர்ற மாதிரி, அவங்க அவங்க ஏரியால கில்லியா இருக்கணும். இதுக்கு அந்த ஜோடி விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவா இருக்கணும். விராட் கோஹ்லி - அனுஷ்கா ஷர்மா

ஆமா பாஸ்! இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் பாலிவுட் நடிகை மற்றும் தயாரிப்பாளரான அனுஷ்கா ஷர்மாவுக்கும் காதல் என்பது ஆல் டைம் ட்ரெண்டிங்கான செய்தி. 2014-ம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் விராட் கோலியின் ஃபார்ம் மோசமாக, அனுஷ்கா ஷர்மாதான் காரணம் என விமர்சித்தனர். 2015-ல் உலகக் கோப்பையின் அரையிறுதியில் விராட் சொற்ப ரன்னில் அவுட் ஆனதற்கும் அனுஷ்காவைத் திட்டித் தீர்த்தனர்.

#ஓரளவுக்கு_தான்_பொறுமைனு இதுக்கெல்லாம் பதிலடி தர நேரம் தேடிட்டு இருந்தார் விராட். 2016  டி- 20 உலகக் கோப்பையில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனுஷ்காவைக் கிண்டல் செய்தவர்களுக்கு ''ஷேம்'' என ட்வீட் செய்து உலகையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தார். ‛கேலி செய்பவர்களை நினைத்தால் கேவலமாக இருக்கிறது. எனக்கு எல்லாமே அனுஷ்காதான்’ என பதில் தந்தார். அதுதான் இந்தியாவின் ‛ட்வீட் ஆஃப் தி இயர்’ என ட்விட்டரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அடுத்ததாக, ஜனவரி 1, 2017-ல் அனுஷ்காவுக்கும் கோலிக்கும் நிச்சயதார்த்தம் என வதந்தி பரவியது. ‛வதந்திகளை நம்பாதீர்கள். எனக்குத் திருமணம் என்றால் நானே அறிவிப்பேன்’ என்றார் விராட். அனுஷ்காவுக்கும் இதே பிரச்னைதான். அவர் தயாரிக்கும் பாலிவுட் படமான ‛பில்ஹூரி’ படத்தை மறைமுகமாகத் தயாரிப்பது விராட்தான் என்பதற்கு, கோபப்பட்டு விளக்கமளித்தார் அனுஷ்கா.

24*7 சர்ச்சைகளைச் சுற்றியே வாழும் இந்த ஜோடி. காதலர் தினத்தில் எல்லோருடைய கணிப்புக்கும் டாட் சொல்லும் விதமாக காதலர் தினம் கொண்டாடிய செல்ஃபியை இன்ஸ்டாகிராமில் பதிந்துள்ளனர். லட்சம் லைக்ஸ் தாண்டி ஹிட் அடிக்கிறது பதிவு.

 

Everyday is a valentine day if you want it to be. You make everyday seem like one for me ❤❤. @anushkasharma

A post shared by Virat Kohli (@virat.kohli) on

இந்தப் பதிவில் ‛அனுஷ்கா விருப்பப்பட்டால் 365 நாளுமே காதலர் தினம்தான்’ என்று கூறியுள்ளார் விராட். என்னதான் பிரேக் அப், கிண்டல் மீம்ஸ் என கோலி - அனுஷ்கா சுற்றி வளைக்கப்பட்டாலும் கிரிக்கெட்டில் கெத்தான பேட்ஸ்மேனாக கோலியும், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக அனுஷ்காவும் தொடர்கிறார்கள். காதல் எந்தவிதத்திலும் கேரியரைப் பாதிக்கவில்லை என்பதையும் தெளிவாகக் கூறுகிறார்கள்.

அனுஷ்கா - கோலி காதல், இன்றைய தலைமுறையின் ட்ரெண்டிங் காதல் வரிசையில் இடம்பிடித்துள்ளது. எந்த இடத்திலும் காதலையும், தன் ஜோடியையும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்காமல் இருப்பதே கெத்து. 

- ச.ஸ்ரீராம்


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close