வெளியிடப்பட்ட நேரம்: 01:59 (16/02/2017)

கடைசி தொடர்பு:01:34 (16/02/2017)

குஜராத்தில் இந்திய தேசியகீதம் பாடி உலக சாதனை

குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள காக்வாட் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோவிலில் சாமி சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கே கூடியிருந்த சுமார் ஐந்து லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் 'ஜன கன மன' என தொடங்கும் இந்திய நாட்டின் தேசியகீதத்தை பாடினர். இந்த உலக சாதனையை கணித்த 'கின்னஸ்' நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களால் உலக கின்னஸ் சான்றிதழும் வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் வங்காளதேசத்தில் கடந்த 2014-ல் இரண்டரை லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் கூடி அந்நாட்டின் தேசியகீதத்தை பாடியதே உலக சாதனையாகக் கருதப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க