வெளியிடப்பட்ட நேரம்: 05:14 (16/02/2017)

கடைசி தொடர்பு:11:00 (16/02/2017)

டி குன்ஹா மற்றும் ஆச்சார்யா இல்லங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு!

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலியால், சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான்மைக்கேல் டி குன்ஹா மற்றும் அரசுதரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோர்களின் இல்லங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  ஏனெனில்,கடந்த 2014-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் வழங்கியதீர்ப்பினால், அதிர்ந்த அதிமுகவினர் பெங்களூருவில் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மைக்கேல் டி குன்ஹா மற்றும் ஆச்சார்யா

மேலும் தற்போது வழங்கியிருக்கும் தீர்ப்பு ஜான் மைக்கேல் டி குன்ஹா கடந்த 2014-ல் வழங்கிய  தீர்ப்பை வழிமொழியும் வண்ணம் அமைந்திருப்பதால், சில விரோதிகளால் அவர்களுக்கு ஆபத்து நேரலாம் என யூகித்த பெங்களூரு  மாநகர காவல் ஆணையர் பிரவீன்சூட் இருவர் இல்லங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க