வெளியிடப்பட்ட நேரம்: 05:58 (16/02/2017)

கடைசி தொடர்பு:23:28 (16/02/2017)

இந்திய பங்களாதேஷ் எல்லையில் 2000 ரூபாய் கள்ளநோட்டுக்கள் புழக்கம்!

நேற்று எல்லை பாதுகாப்பு படையினரால்  மேற்குவங்க மாநிலம்,மால்டா மாவட்டத்தில் உள்ள மாந்தோட்டத்தில் இந்திய அரசால் புதிதாக  அறிமுகம் செய்யப்பட்ட 2,000 ரூபாய் கள்ளநோட்டுக்கள் 100 எண்ணிக்கை, பறிமுதல் செய்யப்பட்டன.

2000 ரூபாய் கள்ளநோட்டு


 கடந்த இருதினங்களில் பிடிபட்ட பெரும்தொகையாக இது கருதப்படுகிறது. இது குறித்து விசாரித்த தேசிய புலனாய்வுத்துறையினர்,  மால்டா மாவட்டத்தைச்சேர்ந்த ஒருவர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகிறது. இந்திய - வங்காளதேச எல்லையில் சம்பந்தப்பட்டவர் பிடிப்பட்டதால், இது பாகிஸ்தானின் நாசவேலையாக இருக்குமோ..? என சந்தேகிக்கப்படுகிறது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க