உத்தரப்பிரதேச தத்துப்பிள்ளை நான் -மோடி பளீச்! #modispeech

உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலையொட்டி நேற்று நடைபெற்ற பா.ஜனதா பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "உத்தரப்பிரதேச மக்கள் பா.ஜனதாவை ஆதரிக்க முடிவெடுத்துவிட்டனர். இதற்கு இங்கு கூடியுள்ள மக்கள் கூட்டமே சாட்சி. பாரதிய ஜனதாவை ஆதரித்தால் வரும் ஐந்து ஆண்டுகளில் உத்தரப்பிரதேசம் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளில் இருந்தும் விடுபடுவதற்கான வழி காட்டுகிறேன். இங்கு வறுமை இருப்பதற்கு, முன்னால் ஆண்ட அரசுகளே காரணம். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். கடவுள் கிருஷ்ணர் உத்தரப்பிரதேசத்தில் பிறந்து குஜராத்தை தனது சொந்த பூமியாக மாற்றிக்கொண்டார். அதேபோல நான் குஜராத்தில் பிறந்தவன், உத்தரப்பிரதேசம் என்னைத் தத்தெடுத்திருக்கிறது. நான் உத்தரப்பிரதேசத்தின் தத்துப்பிள்ளை" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!