ஜம்முவில் 2 போலீஸார் மீது வெடிகுண்டு வீச்சு! | In jammu and kashmir, two policers affected by grenade

வெளியிடப்பட்ட நேரம்: 01:10 (18/02/2017)

கடைசி தொடர்பு:12:48 (18/02/2017)

ஜம்முவில் 2 போலீஸார் மீது வெடிகுண்டு வீச்சு!

ம்மு காஷ்மீர் மாநிலத்தில், ஶ்ரீநகரின் புறநகர்ப் பகுதியான நவ்கம் என்னும் ஊரில், போஹ்ரு சவுக் ஏரியாவில் (Pohru chowk) இன்று மாலை 6.40 மணி அளவில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசித்  தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு போலீஸார் காயம் அடைந்துள்ளனர். 

ஜம்மு காஷ்மீர் தாக்குதல்

இதற்குமுன், கடந்த செவ்வாயன்று தீவிரவாதிகள் இரண்டு இடங்களில் நடத்திய தாக்குதல்களில், மேஜர்.கே.தஹியா உட்பட, மூன்று ராணுவவீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ஶ்ரீநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் பதற்றம் நிலவுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close