வெளியிடப்பட்ட நேரம்: 03:24 (18/02/2017)

கடைசி தொடர்பு:07:57 (18/02/2017)

ஜியோவை வேகத்தில் முந்தியது ஏர்டெல் 4ஜி!

இந்திய டெலிகாம் சந்தையைப் புரட்டிப்போட்டது ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்தான். ஆனால், சமீபகாலமாக அதன் போட்டி நிறுவனமான ஏர்டெல்லைவிட, ஜியோ வேகத்தில் பின்தங்கியிருப்பது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஜியோ சேவைகள் இப்போதும் இலவசமாக வழங்கப்பட்டுவருகின்றன. ஆனால், துவக்கத்தில் இருந்த ஜியோவின் வேகம் இப்போது இல்லை என்ற குற்றச்சாட்டும் ஜியோ பயனாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளது. நவம்பர் மாதத்தில் 5 எம்பியாக இருந்த ஏர்டெல்லின் 4ஜி டவுண்லோட் வேகம், இப்போது 11.9 எம்பியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆரம்பத்தில் 18 எம்பி வேகத்தில் வழங்கப்பட்ட ஜியோவின் டவுண்லோட் வேகம் 8.3 எம்பியாகக்  குறைந்துள்ளது. நாடு முழுக்க ஜியோ இன்டர்நெட் வேகம் குறைய, புதிய சலுகையின் மூலம் இலவச சேவைகள் அதிகமாக வழங்கப்பட்டதே இதற்குக் காரணம். இது, ஜியோ வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க