வெளியிடப்பட்ட நேரம்: 05:01 (18/02/2017)

கடைசி தொடர்பு:12:51 (18/02/2017)

மோடியைத் தாக்கிப் பேசிய பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க-வை ஆதரித்து சமீபத்தில் பிரசாரம் மேற்கொண்டார், பிரதமர் நரேந்திரமோடி.அப்போது, அவர் உத்தரப்பிரதேசத்தின் தத்துப்பிள்ளை என்றார். அதற்கு காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப்பேச்சாளர் பிரியங்கா காந்தி, "மோடிஜி, வெளியாட்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேவை உத்தரப்பிரதேசத்துக்கு இருக்கிறதா? இங்கு இளைஞர்களே இல்லையா? உத்தரப்பிரதேசத்தைத்  தங்கள் எண்ணத்திலும், இதயத்திலும் தாங்கியுள்ள ராகுல் மற்றும் அகிலேஷ் ஆகிய இரண்டு இளைஞர்கள் இங்கு இருக்கின்றனர். அதனால் உத்தரப்பிரதேசத்துக்கு தத்துப்பிள்ளை தேவையில்லை" என்று தாக்கிப் பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க